Home /News /entertainment /

‘நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை’ – நம்பி ஏமாற வேண்டாம்…

‘நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை’ – நம்பி ஏமாற வேண்டாம்…

விஜய் - ஜேசன் விஜய்

விஜய் - ஜேசன் விஜய்

Vijay son Jason : வாரிசு படத்தின் ஷூட்டிங் காட்சிகளை லீக் செய்ய வேண்டாம் என்று விஜய்யின் மகன் ஜேசனின் பெயரில் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், எந்தவொரு சமூக வலைதளங்களிலும் இல்லையென விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜேசன் பெயரில் பதிவுகள் வெளிவந்த நிலையில் இந்த விளக்கம் வெளிவந்திருக்கிறது.

    விஜய் தற்போது வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபள்ளி வாரிசு படத்தை இயக்க, தில் ராஜு படத்தை தயாரிக்கிறார்.

    கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய் தேவரகொண்டாவின் லைகர்…

    இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. உச்சகட்டமாக விஜய்யும், ராஷ்மிகாவும் சிவப்பு உடையில் நடனமாடும் 30 வினாடி காட்சி ஒன்று லேட்டஸ்டாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து ஷூட்டிங் காட்சிகள் லீக் ஆனதால் விஜய் ரசிகர்கள் படக்குழுவினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் ஷூட்டிங் காட்சிகளை லீக் செய்ய வேண்டாம் என்று விஜய்யின் மகன் ஜேசனின் பெயரில் ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.



    இந்த ஐடிக்கு கணிசமான ஃபாலோயர்கள் இருந்ததால் அது ஜேசன்தான் என ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் நம்பி ஏமாந்தனர். ஜேசனின் பெயரில் வெளிவந்த பதிவு வைரலான நிலையில், அது விஜய்யின் மகன் ஜேசன் இல்லை என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.



    விஜய்யின் மகன் ஜேசன் எந்தவொரு சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை என்றும், இதுபோன்ற போலி ஐடிக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று விஜய் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி