சமீபத்தில் விஜய் யுவன் சங்கர் ராஜா இருவரும் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியது. விஜய்யும் யுவனும் இணையப்போகிறார்களா என்ற கேள்வியையும் அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தும் ஈடேறாத சில விஷயங்களில் ஒன்று விஜய் யுவன் சங்கர் ராஜா கூட்டணி. யுவன் இசையமைத்து விஜய் நடித்த படம் புதிய கீதை. இப்படம் 2003-ம் ஆண்டு வெளிவந்தது.
அதற்குப் பிறகு கதாநாயகனாக விஜய் உச்சம் தொட்ட போதும் சரி, இசையமைப்பில் யுவன்சங்கர் ராஜா ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்திலும் சரி இருவர் கூட்டணியில் எந்த படமும் வெளிவரவே இல்லை.
தற்போது தொடர்ந்து அனிருத் இசையில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகிப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. வழக்கம் போல விஜயின் பாடல்கள் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே ஒரு திருவிழா மனப்பான்மையை அவரது படங்களின் ரிலீஸின்போது உருவாக்கி வருகின்றன.
இப்படிப்பட்ட விஜய் படங்களுக்கு யுவன் இசையமைத்தால் அதன் தரம் ‘வேற மாதிரி’ இருக்கும் என்று தொடர்ந்து விஜய் மற்றும் யுவன் ரசிகர்கள் வலைத்தளங்களில் அவ்வப்போது வருத்தத்தைத் தெரிவிப்பதும் உண்டு.
யுவன் சங்கர் ராஜாவுடன் விஜய்.
சமீபத்தில் விஜய் யுவன் சங்கர் ராஜா இருவரும் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகியது. விஜயும் யுவனும் இணையப்போகிறார்களா என்ற கேள்வியையும் அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது.
யுவன் இசையமைப்பில் விஜய் பாட வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஏற்கெனவே கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பே யுவன் சங்கர் ராஜா இசையில் நாசர், பிரேம்ஜி இருவருடனும் சேர்ந்து விஜய் யுவன் இசையமைப்பில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
விக்னேஷ் கதாநாயகனாக நடித்த ‘வேலை’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காலத்துக்கேத்த ஒரு கானா’ என்ற பாடலை யுவன் இசையில் விஜய் பாடியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.
Published by:Saravana Siddharth
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.