ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கலைஞர் எம்ஜிஆர் ஜெ வை புகழ்ந்துள்ள நடிகர் விஜய்! - வீடியோ

கலைஞர் எம்ஜிஆர் ஜெ வை புகழ்ந்துள்ள நடிகர் விஜய்! - வீடியோ

கலைஞர் எம்ஜிஆர் ஜெவைப் புகழ்ந்த விஜய்.

கலைஞர் எம்ஜிஆர் ஜெவைப் புகழ்ந்த விஜய்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், ரஜினி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் இடத்தை நிரப்பும் விஜய் தன்னுடைய பாடல்களில் அரசியல் நெடி இல்லாத வண்ணமே பார்த்துக்கொள்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

Actor Vijay: தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனான விஜய்க்கு இன்று 48வது பிறந்தநாள். தொடர்ந்து பல வருடங்களாக பாக்ஸ் ஆபிஸில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் விஜய் ஒவ்வொரு படத்திலும் வசூல் சாதனை செய்து வருகிறார்.

மற்ற எல்லா சினிமா சூப்பர்ஸ்டார்களை துரத்தும் அரசியல் கேள்வியைப் போல் தென்னிந்தியத் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் விஜயைச் சுற்றியும் நீண்ட நாட்களாக ஒரு கேள்வி துரத்தி வருகிறது. அரசியல் பிரவேசம் செய்வாரா இல்லையா என்பதுதான் அக்கேள்வி.

விஜயின் சில வசனங்கள் மற்றும் படத்தலைப்புகள், அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை பல நேரங்களில் அவரது அரசியல் ஆர்வத்துக்குக் கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளன.

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவரது மக்கள் இயக்க உறுப்பினர்கள் தேர்தல் பணி செய்தனர். அத்தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைத்த போது, அவ்வெற்றிக்கு அணிலாக இருந்து உதவினோம் என அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்தார்.

Thalapathy Vijay's favourite TV show, thalapathy vijay, thalapathy vijay birthday, தளபதி விஜய், விஜய் படங்கள், தளபதி விஜய் பிறந்தநாள், தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், தளபதி விஜய் ரசிகர்கள், vijay vishal movie, vishal vijay agrocorp, vijay vishal actor, sandakozhi 1, sandakozhi 1 full movie, sandakozhi mp3, sandakozhi heroine name, sandakozhi 2 songs, sandakozhi 2 release date, sandakozhi 2 cast
நடிகர் விஜய்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் வென்றது கவனம் பெற்றது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், ரஜினி உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களின் இடத்தை நிரப்பும் விஜய் தன்னுடைய பாடல்களில் அரசியல் நெடி இல்லாத வண்ணமே பார்த்துக்கொள்கிறார்.

Must Read: Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் ‘பீஸ்ட்’ உருவான கதை!

கடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவின் போது தன் வீட்டிலிருந்து சைக்கிளிலேயே அவர் வாக்குச்சாவடிக்குச் சென்றதும், அந்த சைக்கிள் கருப்பு சிவப்பு வண்ணத்தில் இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் பீஸ்ட் பட ரிலீஸை முன்னிட்டு அவர் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில்கூட அவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளியில் காட்டாத வண்ணமே கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் கதாநாயகனாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தில் வரும் ‘மாப்பிள்ளை’ என்ற பாடலில் விஜய் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவரையும் வாழ்த்திப் பாடியுள்ள வரிகள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள அக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Movie Songs, Vijay