Home /News /entertainment /

மகேந்திரன் நடிக்கும் கரா போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...!

மகேந்திரன் நடிக்கும் கரா போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி...!

மகேந்திரன் நடிக்கும் கரா போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

மகேந்திரன் நடிக்கும் கரா போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

மகேந்திரன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். அந்தப் படம் அவரது பெயரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

  • News18
  • Last Updated :
மகேந்திரன் என்றால் பலருக்கும் தெரியாது. மாஸ்டர் மகேந்திரன் என்று சொன்னால் சட்டென்று தெரியும். வளர்ந்த இளைஞனான பிறகும் மகேந்திரனை மாஸ்டர் மகேந்திரன் என்றால்தான் அடையாளம் தெரிகிறது.

மகேந்திரன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். அந்தப் படம் அவரது பெயரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்போது பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். முக்கியமாக அமிகோ கராஜ் என்ற படம் அவரது நடிப்பில் தயாராகி வருகிறது. நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.



மகேந்திரன் தனி நாயகனாக நடிக்கும் மற்றொரு திரைப்படத்துக்கு ரிப்பப்பரி  என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வையைம் நேற்று வெளியானது. ஆனால், மகேந்திரன் நடிப்பில் முதலாவதாக வெளிவரயிருக்கும் படம் கரா. இதன் போஸ்டரை நேற்று விஜய் சேதுபதி வெளியிட்டார். கரா படத்தை அறிமுக இயக்குனர் அவதார் இயக்குகிறார். பவானி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ராஜேஷ்குமார் படத்தை தயாரிக்கிறார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி என்பவர் படத்துக்கு இசையமைக்கிறார்.



Also read... ஷங்கர், ராம் சரண் படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்த தயாரிப்பாளர்!

மாஸ்டர் படத்தில் நடித்த போது ஏற்பட்ட நட்பில் கரா போஸ்டரை வெளியிட மகேந்திரன் விஜய் சேதுபதியை அணுக, அவரும் மகிழ்வோடு சம்மத்திருக்கிறார். நேற்று படப்பிடிப்புதளத்தில் வைத்து கரா போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். மகேந்திரன், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் இந்த நிகழ்வின் போது உடனிருந்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி