புதிய படத்தில் மனநலம் பாதித்தவரா விஜய் சேதுபதி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. 

news18
Updated: July 4, 2019, 11:20 AM IST
புதிய படத்தில் மனநலம் பாதித்தவரா விஜய் சேதுபதி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் சேதுபதி
news18
Updated: July 4, 2019, 11:20 AM IST
கடைசி விவசாயி என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான மணிகண்டன் ஏற்கனவெ கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்திருந்தார்.

பாபி சிம்ஹாவின் அக்காவா பிக்பாஸ் ரேஷ்மா? வைரலாகும் போட்டோ!

காக்கா முட்டை படத்தைத் தொடர்ந்து விதார்த் நடித்த குற்றமே தண்டனை, விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருந்தார்.

விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு மணிகண்டன் இயக்கும் கடைசி விவசாயி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின.ஆனால், தற்போது அந்த படத்திலும் விஜய் சேதுபதியே நடித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி கடைசி விவசாயி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி மனநலம் பாதித்த ஒருவராக நடிக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாங்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் ஜி.வி.பிரகாஷ்: வைரலாகும் போட்டோஸ்!
First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...