ஒரே படத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் - விக்ராந்த்

விக்ராந்துடன் இணையவிருக்கும் படம் குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

ஒரே படத்தில் விஜய் சேதுபதி - விஷ்ணு விஷால் - விக்ராந்த்
விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: March 19, 2019, 8:46 AM IST
  • Share this:
விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

விக்ராந்த் ஹீரோவாக நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தாக்க தாக்க’. இந்தப் படத்தை விக்ராந்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கியிருந்தார். இவர், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து இன்னொரு படத்தை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு ஏற்கெனவே விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.


விக்ராந்துடன் இணையவிருக்கும் படம் குறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.தற்போது விஷ்ணு விஷால் ஜகஜால கில்லாடி படத்திலும் விக்ராந்த் பக்ரீத், சுட்டுப்பிடிக்க உத்தரவு, வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றனர்.
First published: March 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்