ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதியும், யுவன் சங்கர் ராஜாவும்..!

படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தங்களது சம்பள பணத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களிடன் அளித்துள்ளனர். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

news18
Updated: June 28, 2019, 2:13 PM IST
ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்த விஜய் சேதுபதியும், யுவன் சங்கர் ராஜாவும்..!
விஜய் சேதுபதி மற்றும் யுவன் சங்கர் ராஜா
news18
Updated: June 28, 2019, 2:13 PM IST
சிந்துபாத் படத்தின் ரிலீசுக்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் செய்த காரியும் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார்.

வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் படம் சிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கல்’ படத்தோடு வெளியாக இருந்தது. ஆனால் சிந்துபாத் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.புரொடக்‌ஷனின் ராஜராஜனுக்கும், ‘பாகுபலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நிறுவனத்திற்கும் இருந்த பண பிரச்னைகளில், சிந்துபாத் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கோர்ட்டில் ’ஸ்டே’ வாங்கியது ஆர்கா நிறுவனம்.

இந்நிலையில், இந்த பிரச்னைகளை தொடந்து நேற்று சிந்துபாத் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்காக நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தங்களது சம்பள பணத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களிடன் அளித்துள்ளனர். இந்த செயல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் சேகர் தலைமையில் புதிய நிர்வாகிகள் கொண்ட பாரதிராஜா, ஜே.எஸ்.கே சதீஸ் குமார், அம்மா கிர்யேஷன்ஸ் சிவா, உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு தேர்தெடுக்கப்பட்டது.

இவர்கள் அனைவருக்கும் சிந்துபாத் படம் வெளியாவதற்கு இருந்த தடைகளை நீக்கியதில் முக்கிய பங்கு உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Also see...

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...