Home /News /entertainment /

டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு!

டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு!

மாமனிதன்

மாமனிதன்

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமனிதன். இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியில் பாராட்டை பெற்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டோக்கியோ திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் சிறந்த ஆசிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமனிதன். இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியில் பாராட்டை பெற்றது. இருந்தாலும் ரசிகர்களின் வருகை குறைவாக இருந்தது.  அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் வெளியானதால் மாமனிதன் திரைப்படம் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டது.

அந்த சமயத்தில் இயக்குநர் சீனு ராமசாமி மாமனிதன் திரைப்படத்தை திரையிட முதல்வர் உதவ வேண்டும் என ட்விட்டர் வாயிலாக கோரிக்கையும் வைத்தார். இருந்தாலும் புதிய படங்களின் வருகை மாமனிதன் பாதித்தது.

இந்த நிலையில் ஆஹா ஓ.டி.டி தளத்தில் படத்தை வெளியிட்டனர்.  அந்த தளத்தில் ஒரு கோடி பார்வைகளை கடந்து மாமனிதன் சாதனை படைத்திருக்கிறது.

Also read... கிராமத்து திரைப்படங்கள்தான் கலாசாரத்தை கூறுகின்றன - நடிகர் கார்த்தி

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் நடைபெறும் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது.

அந்தப் படத்தை பார்த்த தேர்வு குழுவினர் ஆசியாவின் சிறந்த திரைப்படம் என மாமனிதனை தேர்வு செய்துள்ளனர். இதன் காரணமாக இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi, Entertainment

அடுத்த செய்தி