சிந்துபாத்தில் தனது மகனை அறிமுகம் செய்த விஜய்சேதுபதி - டீசர் வீடியோ

சிந்துபாத் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிந்துபாத்தில் தனது மகனை அறிமுகம் செய்த விஜய்சேதுபதி - டீசர் வீடியோ
விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா
  • News18
  • Last Updated: March 11, 2019, 7:26 PM IST
  • Share this:
சிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார். இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிமிடத்தில் இருந்தே படத்தின் டீசருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


இந்தநிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதியின் வசனத்தில் தொடங்கி முடியும் டீசரில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒருசில காட்சிகளில் மட்டுமே வருகிறார். 9-ம் வகுப்பு படித்து வரும் சூர்யா மாநில அளவிலான குத்துச் சண்டை சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கதுபிரபுதேவா, டிரம்ஸ் சிவமணிக்கு பத்ம ஸ்ரீ விருது! - வீடியோ
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்