ஆக்‌ஷனில் அசத்தும் விஜய் சேதுபதி... சங்கத்தமிழன் டீசர் வீடியோ!

news18
Updated: August 15, 2019, 11:24 AM IST
ஆக்‌ஷனில் அசத்தும் விஜய் சேதுபதி... சங்கத்தமிழன் டீசர் வீடியோ!
விஜய் சேதுபதி
news18
Updated: August 15, 2019, 11:24 AM IST
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான வாலு, விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா, மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், ஜான் விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வருகிறார்.


படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த டீசரில் ஆக்‌ஷன் காட்சிகளும், விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...