மின்னல் வேகத்தில் படத்தை முடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி!

’மாமனிதன்’ படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

news18
Updated: February 12, 2019, 1:21 PM IST
மின்னல் வேகத்தில் படத்தை முடித்துக் கொடுத்த விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி
news18
Updated: February 12, 2019, 1:21 PM IST
நடிகர் விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி ‘மாமனிதன்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. படப்பிடிப்பு தொடங்கிய இரண்டே மாதத்தில் மின்னல் வேகத்தில் நிறைவடைந்துள்ளது.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் இளையராஜாவின் இசையைக் கேட்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் - வீடியோ

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...