Home /News /entertainment /

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ்

க/பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

    பெ.விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஜீ பிளக்ஸ் என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

    வழக்கமாக உள்ள சந்தா முறை போல் அல்லாமல் இந்த திரைப்படத்தை பார்க்க பிரத்யேகமாக பணம் செலுத்தி பார்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    முன்னதாக படத்தைப் பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறுகையில், 'அறம்' படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி ஆகியோர் அற்புதமாக நடித்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor vijay sethupathi, Kollywood

    அடுத்த செய்தி