விஜய் சேதுபதி வெளியிட்ட செகண்ட் லுக் - ரசிகர்கள் ஹேப்பி!

விஜய் சேதுபதி வெளியிட்ட செகண்ட் லுக் - ரசிகர்கள் ஹேப்பி!
நடிகர் விஜய்சேதுபதி
  • Share this:
எந்தவித அறிவிப்பும் இல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் துவங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகும் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு அதேபோல் இன்று காலை வெளியிடப்பட்டது.


ஆனால் செகண்ட் லுக் போஸ்டர் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் செகண்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.இன்று மாலை வெளியான மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய்சேதுபதி இடம்பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: நம்ப வச்சு ஏமாத்திட்டிங்களே ‘மாஸ்டர்’ - ஏக்கத்தில் ரசிகர்கள்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்