மாஸ்டருக்கு முன்பே வெளியான விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்!

மாஸ்டருக்கு முன்பே வெளியான விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் விஜய் சேதுபதி
  • Share this:
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குநர் மகிழ் திருமேனி நடிக்கிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பழனியில் துவங்கியது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்னையும் மையமாக பேசப்பட இருக்கிறது. விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போஸ்டரில் விஜய் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று வெளியாகவிருக்கும் இரண்டாவது போஸ்டரில் விஜய் சேதுபதி இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாகவே யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.மேலும் படிக்க: தனுஷின் ’பட்டாஸ்' எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்!
First published: January 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்