ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் வெளியீடு அறிவிப்பு

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் வெளியீடு அறிவிப்பு

யாதும் ஊரே யாவரும் கேளீர்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

நீண்ட இடைவெளிக்குபின் வெளியாகும் வெளியாகும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் சேதுபதி நடித்திருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடித்து முடித்த பல திரைப்படங்கள் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கின்றன. அதில் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் என்பவர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது அவை அனைத்தையும் கடந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இளையராஜா ரசிகர்களை ஏமாற்றிய எங்க ஊரு ராசாத்தி பாடல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக டிசம்பர் மாதம் படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார்.

Published by:Shalini C
First published:

Tags: Actor Vijay Sethupathi, Tamil Cinema