Vijay Sethupathi: சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள்.

  • Share this:
    நடிகர் விஜய் சேதுபதி சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கூட ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தவிர யூ-ட்யூபில் பெரும்பாலும் சமையல் சம்மந்தமான வீடியோக்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

    இந்நிலையில் உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை தான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். ‘மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்’ என்ற பெயரில் இந்நிகழ்ச்சி தயாராகியுள்ளது. உலகின் 40 நாடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மாஸ்டர் செஃப்’ என்ற நிகழ்ச்சியை தமிழில் சன் டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

    உலகளாவிய நிகழ்ச்சி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விஷயம் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: