ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

MK Stalin: விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மு.க.ஸ்டாலினுக்கு 14 கோரிக்கை!

MK Stalin: விஜய் சேதுபதி, வெற்றிமாறன் மு.க.ஸ்டாலினுக்கு 14 கோரிக்கை!

விஜய் சேதுபதி - வெற்றிமாறன் - மு.க.ஸ்டாலின்

விஜய் சேதுபதி - வெற்றிமாறன் - மு.க.ஸ்டாலின்

வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஸ்டாலின். இதையடுத்து அவரை சந்தித்து தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழக முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் 14 கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக - பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. 50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதோடு வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் ஸ்டாலின். இதையடுத்து அவரை சந்தித்து தமிழ் சினிமா திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  வாழ்த்து தெரிவிக்கும் போது, முடங்கிப் போயிருக்கும் சினிமா துறைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கையும் விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்பட 67 பேர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  அதோடு 14 கோரிக்கைகள் கொண்ட கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் ஸ்டெர்லைட், கூடங்குளம், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்குப் பிறகு பதவி ஏற்கும் வரை காத்திருக்காமல், முக்கியமான விஷயங்களுக்கு அதிரடி முடிவுகளை எடுத்து வரும் ஸ்டாலின், விரைவில் இந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor vijay sethupathi, Director vetrimaran