ரம்யா கிருஷ்ணன் 37-னா விஜய் சேதுபதி 90 டேக்!

ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு காட்சி 37 முறை படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணன் 37-னா விஜய் சேதுபதி 90 டேக்!
சூப்பர் டீலக்ஸ்
  • News18
  • Last Updated: March 18, 2019, 9:26 AM IST
  • Share this:
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஒரு காட்சிக்காக 90 முறை டேக் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ ஃபகத் ஃபாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திருநங்கையாக விஜய் சேதுபதி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தை பார்த்த பலரும் படக்குழுவை பாராட்டினர். பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், ‘சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன். கொண்டாடுவதற்கு படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அந்தப் படத்தில் நான் இடம்பெறாதது வருத்தமாக இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்தப் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி உருக்கமான காட்சியை படம் பிடித்தபோது 90 முறை டேக் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு காட்சியும் 37 முறை படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Also watch

First published: March 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்