ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 96 இரண்டாம் பாகம்?

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் 96 இரண்டாம் பாகம்?

96 திரைப்படம்

96 திரைப்படம்

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தேசிய விருதை பெற்றார் விஜய் சேதுபதி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான '96' ரசிகர்களை பெரிதும் கவர்ந்த, தமிழின் சிறந்த காதல் படங்களில் ஒன்று. தற்போது, '96' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரேம் குமார் '96' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், தனது சமீபத்திய உரையாடலில் '96' படத்தின் தொடர்ச்சியை மறுத்துள்ளார் பிரேம் குமார். ஆக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிளப்பும் வதந்திகளில் இதுவும் ஒன்று.

  விஜய் சேதுபதி பன்முகதன்மைக் கொண்ட நடிப்புக்கு பிரபலமானவர். சவாலான வேடங்களில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கும் அவர், பல உன்னதமான நடிப்பை வழங்கியுள்ளார். அதே நேரத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார். ஆனால் ஒரு கிளாசிக் திரைப்படத்தை ரீமேக்கோ, இரண்டாம் பாகமோ செய்யக் கூடாது என்று கருதும் விஜய் சேதுபதி, தனது திரைப்படங்களின் தொடர்ச்சியில் இதுவரை இருந்ததில்லை.

  விஜய்யுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட ஸ்பெஷல் படம்!

  விஜய் சேதுபதி தற்போது அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதனால் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக மணிகண்டன் இயக்கத்தில் 'கடைசி விவசாயி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Trisha, Vijay sethupathi