Home /News /entertainment /

புஷ்பா தி ரூல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி?

புஷ்பா தி ரூல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க, முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகமும் பான்-இந்திய வெளியீடாக இருக்கும்.

    புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அல்லு அர்ஜுனின் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ஹிட்டானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதியை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. முதல் பாகத்தில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் பின்னர் அந்தப் படத்தில் இருந்து வெளியேறினார். இருப்பினும், தயாரிப்பாளர்கள் இப்போது 'புஷ்பா: தி ரூல்' படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

    தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம்!

    இருப்பினும், இது குறித்து இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 'புஷ்பா: தி ரூல்' படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெற்றிப்படமாக மாற்ற, இயக்குனர் சுகுமார் வலுவான திரைக்கதையை அமைத்து வருகிறார்.

    2022-ன் முதல் பாதியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான தமிழ் படங்கள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    புஷ்பா தி ரூல் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். ஃபஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க, முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகமும் பான்-இந்திய வெளியீடாக இருக்கும். மேலும், முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், படம் வெளிநாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Allu arjun

    அடுத்த செய்தி