விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... மாஸ் காட்டும் ‘தளபதி 64’

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தளபதி 64 திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 27, 2019, 10:37 AM IST
விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி... மாஸ் காட்டும் ‘தளபதி 64’
தளபதி 64
news18
Updated: August 27, 2019, 10:37 AM IST
விஜய் நடிக்கும் 64-வது படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தை திட்டமிட்ட படி தீபாவளியன்று வெளியிட படக்குழு உறுதியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 64 படம் குறித்த அப்டேட் அதிகராப்பூர்வமாக வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தளபதி 64 திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேரில் சந்தித்து கதை பற்றி பேசியதாகவும் அந்த கதை பிடித்து போய் விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவதால் தேதிகள் ஒதுக்குவதில் சிரமம் இருப்பதாகவும் நிச்சயம் இந்த படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்குவதாகவும் லோகேஷ் கனகராஜிடம் விஜய்சேதுபதி  கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

Loading...

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் விஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு செம விருந்தாக இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

Also watch

First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...