அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி.
  • News18
  • Last Updated: October 30, 2019, 4:42 PM IST
  • Share this:
அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்சேதுபதி, கதை பிடித்திருந்தால் வில்லனாகவோ அல்லது சிறிய கதாபாத்திரமென்றாலோ கூட உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து விடுகிறார். ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார்.

எப்போதும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் விஜய் சேதுபதி, தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். விஜய் - விஜய் சேதுபதியைத் திரையில் காண இருவரது ரசிகருமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுஒருபுறமிருக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கும் புதிய படத்திலும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: டிக்டாக் காதலிக்காக மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இன்ஜினியர்

First published: October 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading