Home /News /entertainment /

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் வேடமும் அதிகம் பேசப்பட்டது.

    ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    விஜய் சேதுபதி தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவர். அவரிடம் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. விஜய் சேதுபதியின் ஹீரோ வேடங்களை விட வில்லன் வேடங்கள் மிகவும் பிரபலம். அட்லீ மற்றும் ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு முதலில் ராணா டகுபதியின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர் தனது முந்தைய படங்களில் பிஸியாக இருப்பதால், தயாரிப்பாளர்களால் அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, 'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை 'ஜவான்' தயாரிப்பாளர்கள் அணுகியதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி அணுகப்பட்டார், இதைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பறக்க தயாரான வேகத்திலேயே சிறகொடிந்து போன என் உயிர் தோழன் பாபு

    சீனு ராமசாமி இயக்கிய 'மாமனிதன்' படத்தில் விஜய் சேதுபதி, நடுத்தரக் குடும்பத்தலைவராக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதோடு கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் அவரது வில்லன் வேடமும் அதிகம் பேசப்பட்டது.

    ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அட்லி, பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள படம் ஜூன் 2, 2023 அன்று வெளியாகும் என தெரிகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Atlee, Shah rukh khan

    அடுத்த செய்தி