முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி?

news18
Updated: July 22, 2019, 7:45 PM IST
முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி?
news18
Updated: July 22, 2019, 7:45 PM IST
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும்  திரைப்படமாக உருவாகி வருகிறது.  ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வார்னே உள்ளார்.

800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘800’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: சூர்யாவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு!

Loading...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...