Home /News /entertainment /

Vijay Sethupathi: மும்பைக்கார் - முனீஷ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி?

Vijay Sethupathi: மும்பைக்கார் - முனீஷ்காந்த் வேடத்தில் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

லோகேஷ் கனகராஜின் 'மாநகரம்' படத்தை இந்தியில் சந்தோஷ் சிவன் ரீமேக் செய்கிறார். 'மும்பைக்கார்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

    லோகேஷ் கனகராஜின் 'மாநகரம்' படத்தை இந்தியில் சந்தோஷ் சிவன் ரீமேக் செய்கிறார். 'மும்பைக்கார்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

    மும்பைக்கார் படத்தின் சிறப்பம்சம், இதில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மக்கள் செல்வனின் முதல் இந்திப் படம் இது என்பது முக்கியமானது. அடுத்து எழும் கேள்வி, விஜய் சேதுபதி இதில் எந்த வேடத்தில் நடிக்கிறார்? என்பது தான்.

    சந்தோஷ் சிவன் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. எனினும் ஊகங்கள் பல உலா வருகின்றன. மாநகரம் படத்தில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தை மெருகேற்றி அதில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்பது அதில் ஒன்று.

    முனீஷ்காந்த் மாநகரம் படத்தில் நடித்திருக்கும் அந்த குழந்தை கடத்தல் எபிசோட் லோகேஷ் கனகராஜ் முதலில் எழுதிய மாநகரம் ஸ்கிரிப்டில் இல்லை. எழுத்தாளர் சீனிவாஸ் கவிநயம் எழுதிய வேறொரு ஸ்கிரிப்டில் இடம்பெற்றிருந்ததை மாநகரத்துக்காக அவரது அனுமதியுடன் சேர்த்துக் கொண்டனர் என்பது பலரும் அறியாத பிளாஷ்பேக்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி