Home /News /entertainment /

Vijay Sethupathi: கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

Vijay Sethupathi: கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி - கமல் ஹாசன்

விஜய் சேதுபதி - கமல் ஹாசன்

கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டிருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

    கமலின் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டிருப்பதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் நடிக்கிறார். அவரது ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசை, அனிருத். படத்தின் டைட்டில் டீஸரை முன்பே வெளியிட்ட நிலையில், கமலின் அரசியல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

    வாக்குப்பதிவு முடிந்ததற்கு அடுத்தநாள், கமலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், ஆரம்பிக்கலாங்களா என்று கேட்டிருந்தார். மே மாத ஆரம்பத்தில் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்கின்றன செய்திகள்.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டது. இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில், விக்ரமில் கமலுடன் நடிப்பதாக பகத் பாசில் தெரிவித்தார். நேற்று பேட்டியளித்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள். ஆனால், படத்தில் நடிக்கிறேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் தான் உள்ளது என்றார்.

    விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் படமும், உப்பன்னா தெலுங்குப் படமும் அடுத்தடுத்து வெளியாகின. தொடர்ந்து வில்லனாக நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, மனிதனின் இருண்ட பக்கத்தை இந்த கதாபாத்திரங்கள் மூலம் வெளிக்கொண்டு வருகிறேன். மாஸ்டர், உப்பன்னா இரண்டிலும் என்னுடைய நடிப்பும், கதாபாத்திரமும் ஒன்று போலவா இருக்கிறது என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    வில்லன் ஃபகத் பாசிலா, விஜய் சேதுபதியா? பொறுத்திருந்து பார்ப்போம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Vijay sethupathi

    அடுத்த செய்தி