ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் கமல் ஹாசனுடன் இணையும் விஜய் சேதுபதி?

மீண்டும் கமல் ஹாசனுடன் இணையும் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி - கமல் ஹாசன்

விஜய் சேதுபதி - கமல் ஹாசன்

கமல்ஹாசன் 'இந்தியன் 2' படப்பிடிப்பை முடித்தவுடன், 'KH233' படத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மெகா பிளாக்பஸ்டர் 'விக்ரம்' படத்திற்குப் பிறகு, கமல்ஹாசன் தனது லைன் - அப்புகளை வலுப்படுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக இயக்குனர் ஹெச்.வினோத்துடன் கைகோர்ப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி, கடைசியாக வெளியான 'விக்ரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் வில்லன்களில் ஒருவராக நடித்தார். பன்முக திறமையான விஜய் சேதுபதிபதிக்கு மீண்டும் கமல்ஹாசனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

    அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் மும்முரமாக இருப்பதால், அது முடிந்ததும், கமல்ஹாசன் -ஹெச்.வினோத் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'KH233' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அரசியல் படம் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் 'இந்தியன் 2' படப்பிடிப்பை முடித்தவுடன், 'KH233' படத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.

    முக்கிய கதையில் நடிக்க விஜய்யை அணுகிய ஷங்கர்?

    கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்டமான செட் ஒன்றை அமைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Vijay sethupathi, Vinoth