சேவை செய்பவர்கள் யார், பதவிக்கு அலைபவர்கள் யார்? - ஓட்டு போடச் சொல்லும் விஜய் சேதுபதி

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வருகிறது.

news18
Updated: March 26, 2019, 4:42 PM IST
சேவை செய்பவர்கள் யார், பதவிக்கு அலைபவர்கள் யார்? - ஓட்டு போடச் சொல்லும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
news18
Updated: March 26, 2019, 4:42 PM IST
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் அரசியலை சாக்கடை என்று ஒதுக்கிவிடாதீர்கள் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு அதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு ஆகியவை முடிவுக்கு வந்து தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.

இந்தநிலையில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ அரசியலை சாக்கடை என்று கூறி ஒதுக்கி விடாதீர்கள். சமூக வலைதளங்களில் திட்டி பதிவுபோட்டு விட்டு போய் விடாதீர்கள். நம் வீட்டில் சாக்கடை அடைத்தால் நாம் தானே சுத்தம் செய்கிறோம். ஆகவே தேர்தலைப் புறக்கணிக்காதீர்கள். மக்கள் சேவை செய்பவர்கள் யார், பதவிக்கு அலைபவர்கள் யார் என்பதையும் புரிந்துகொண்டு கண்டிப்பாக வாக்களியுங்கள்” என்று கூறியுள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீக்கடையில் எச்.ராஜா, விஜயபாஸ்கர்!! - வீடியோ

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626