• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் சேதுபதியின் ஹாரர் காமெடி படம்! - புதிய அப்டேட்

விஜய் சேதுபதியின் ஹாரர் காமெடி படம்! - புதிய அப்டேட்

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

  • Share this:
    விஜய் சேதுபதி, தாப்ஸி முதல்முறையாக இணைந்து நடிக்கும் ஹாரர் காமெடிப் படம் குறித்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

    இன்றைய தேதியில் அதிக படங்ளில் நாயகனாக நடிப்பவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். அதேபோல் தாப்ஸி. இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் நடிக்கிறார். இவர்கள் இருவரும் முதல்முறையாக அன்னாபெல் சேதுபதி என்ற படத்தில் இணைகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவொரு ஹாரர் காமெடி படம், பேஷன் ஸ்டுடியோ இதனை தயாரிக்கிறது என்பது ஏற்கனவே அறிந்த தகவல்கள். இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதுவொரு ஃப்ரீயட் திரைப்படம்.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, தாப்ஸி இருவருக்குமே இரண்டு வேடங்கள். சென்னை மற்றும் ஜெய்பூரில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் படத்தை இயக்குகிறார். படம் டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

    படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: