• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஜோதிகா சர்ச்சை: சூர்யா விளக்கத்தை பாராட்டிய விஜய்சேதுபதி!

ஜோதிகா சர்ச்சை: சூர்யா விளக்கத்தை பாராட்டிய விஜய்சேதுபதி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சூர்யாவின் விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் சேதுபதி, “சிறப்பு” என்று தலைப்பிட்டு பாராட்டியுள்ளார்.

  • Share this:
    ஜோதிகாவின் பேச்சு குறித்து சூர்யா அளித்துள்ள விளக்கத்தை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

    விருது விழா ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ஜோதிகா, “எல்லோருக்கும் ஒரு கோரிக்கை, கோயிலுக்காக அதிக காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசிப் பராமரிக்கிறீர்கள். தயவு செய்து அதே தொகையைப் பள்ளிகளுக்கும் கொடுங்கள். மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். இது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்திருந்தார்.

    ஜோதிகா பேசிய வீடியோவை பலரும் பகிர்ந்து அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததால், திடீரென சர்ச்சையாக உருவெடுத்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

    அதில் கூறப்பட்டிருந்ததாவது, “மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

    கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.

    பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர விரும்புகிறோம்.

    தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள். முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்” இவ்வாறு சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



    சூர்யாவின் இந்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் சேதுபதி, “சிறப்பு” என்று தலைப்பிட்டு பாராட்டியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: