முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெற்றிமாறனின் 'விடுதலை' பாகம் 1 - விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

வெற்றிமாறனின் 'விடுதலை' பாகம் 1 - விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்

விஜய் சேதுபதி - வெற்றிமாறன்

விஜய் சேதுபதி - வெற்றிமாறன்

விடுதலை படத்தின் பணிகள் முடிவடையாததால் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் தாமதமாவதாக கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'அசுரன்' பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் சூரி ஹீரோவாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

குறைவான பட்ஜெட்டில் ஒரே பாகமாக துவங்கப்பட்ட இப்படம் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக இரண்டு பாகங்கள் கொண்ட படமாக மாறியுள்ளது. இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


விடுதலை படத்தின் பணிகள் முடிவடையாததால் சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் சூர்யாவும் வாடிவாசல் படத்துக்கு பதிலாக சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்துவருகிறார்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Director vetrimaran, Ilaiyaraja