• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உங்கள பொருத்தவரைக்கும் லாபம்ன்னா என்ன? வர்க்க அரசியல் பேசும் ‘லாபம்’ ட்ரைலர்!

உங்கள பொருத்தவரைக்கும் லாபம்ன்னா என்ன? வர்க்க அரசியல் பேசும் ‘லாபம்’ ட்ரைலர்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

மேல்தட்டு வர்க்கத்திற்கும், உழைப்பாளர் வர்க்கத்திற்கும் இடையே இருக்கும் அரசியலை மையப்படுத்தி ‘லாபம்’ உருவாகியுள்ளதை, இந்த ட்ரைலரில் புரிந்துக் கொள்ள முடிகிறது.

  • Share this:
    விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘லாபம்’ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

    மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் லாபம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இருந்த போது, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் மறைந்தார். கம்யூனிச சிந்தனையாளரான இயக்குநர் ஜனநாதன், லாபம் படத்தையும் அதே அடிப்படையில் இயக்கியுள்ளார்.

    100 ரூபாய் பொருளை 110 ரூபாய்க்கு விற்றால் அதை ஊழல் என்கிறோம். ஆனால், 100 ரூபாய் பொருளின் அடக்க விலைக்குள்ளேயே ஒரு ஊழல் இருக்கிறது. அது குறித்து லாபம் படத்தில் பேசியிருப்பதாக ஜனநாதன் படத்தை ஆரம்பிக்கையில் கூறியிருந்தார்.

    லாபம் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை டி.இமான். விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து லாபம் படத்தைத் தயாரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ’லாபம்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தொழில் நிறுவனங்களை நடத்தும் மேல்தட்டு வர்க்கத்திற்கும், உழைப்பாளர் வர்க்கத்திற்கும் இடையே இருக்கும் அரசியலை மையப்படுத்தி ‘லாபம்’ உருவாகியுள்ளதை, இந்த ட்ரைலரில் புரிந்துக் கொள்ள முடிகிறது.



    ”உங்கள பொருத்தவரைக்கும் லாபம்ன்னா என்ன? முதன்முதல்ல உழைப்ப மூலதனமா போட்டான்ல்ல அவன்கிட்ட இருந்துச்சா? இல்ல. இதான் பாதில வந்துச்சு. என் பாட்டன், முப்பாட்டன்லாம் உழைச்சு உழைச்சு உருவாக்குன ஆறு, குளம், ஏரி எல்லாம் தாண்டா உண்மையான இன்ஃப்ராஸ்டரக்சர்” போன்ற வசனங்கள் தியேட்டரில் கை தட்டல் மழையை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

    லாபம் திரைப்படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: