விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் OTTயில் வெளியாவதில் சிக்கல்

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    ஊரடங்கு காரணமாக திரைப்படங்கள் OTT தலங்களில் வெளியாவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தொடங்கி சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் வரை இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் புதிய பொழுதுபோக்காக OTT மாறி உள்ளது. மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணங்களால் திரையரங்கில் வெளியாக திட்டமிட்டிருந்த விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்தன.

    இந்த இரண்டு திரைப்படங்களையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், திரையரங்க வெளியீட்டை கருத்தில் கொண்டு இந்த இரு திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு படக்குழுவினர் ஏற்கனவே விற்பனை செய்துள்ளதால் தற்பொழுது இந்த திரைப்படங்களை OTT தளத்தில் வெளியிட புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    ALSO READ :  ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகுமா?

    டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி உரிமத்தையும் சேர்த்து விலை பேசுவதால் ஏற்கனவே இந்த திரைப்படங்களுக்கான தொகையை முன்பணமாக வழங்கியுள்ள தனியார் தொலைக்காட்சி மீண்டும் பணத்தைப் பெற்றுக் கொண்டு திரைப்பட உரிமையை விட்டுக்கொடுக்க முன்வராததால் தற்பொழுது OTT தளத்திலும் திரைப்படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    அடுத்தடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவிலேயே இதற்கான சுமுக நிலை எட்டப்படும் என கூறப்படுகிறது
    Published by:Sankaravadivoo G
    First published: