யுவன் ஷங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் ‘எண்ணம் போல்’ வாழ்க்கை என்ற ஆல்பம் பாடலை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பகிர்துள்ளார்.
கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தொற்று இன்றும் தொடர்கிறது. தற்போது தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்திருந்தாலும், இதனால் பல தொழில்களும், மக்களின் அன்றாட வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் நடிகர் நடிகைகள் பலரும் ஒன்றுகூடி
"எண்ணம் போல் வாழ்க்கை" என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளனர். இதனை யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தப் பாடலில் ஆர்யா, சசிகுமார்,
ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், அதுல்யா ரவி, சூரி, மாஸ்டர் மகேந்திரன், ஜி.வி.பிரகாஷ், ஜனனி, அசோக் செல்வன், அம்மு அபிராமி, மகத், ஷெரின், கிருஷ்ணா, குக் வித் கோமாளி அஸ்வின்,
விஜய் டிவி புகழ், பிக்பாஸ் ரைசா வில்சன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தற்போது இந்தப் பாடலை விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.