Home /News /entertainment /

மற்றுமொரு சர்வதேச விழாவில் மாமனிதன் படத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்!

மற்றுமொரு சர்வதேச விழாவில் மாமனிதன் படத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்!

மாமனிதன்

மாமனிதன்

மாமனிதன் படத்திற்கு அப்பா-மகன் கூட்டணியான இளையராஜா மற்றும் யுவன் சங்கரராஜா இசையமைத்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படம் பல விழாக்களில் விருதுகளை குவித்து வருகிறது.

    விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி முக்கிய வேடங்களில் நடித்த, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் தொடர்ந்து விருதுகளை வென்று வருகிறது. தற்போது புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழை பெற்றுள்ளது.

    இந்தப் படம் சமீபத்தில் இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாக்களில் விருதுகளைப் வென்றது. அதோடு கோலிவுட் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தை பாராட்டினர். ”இது ஒரு ‘யதார்த்தமான கிளாசிக்’ என்றும், படத்தில் விஜய் சேதுபதி தனது அற்புதமான நடிப்பிற்காக தேசிய விருதுக்கு தகுதியானவர்” என்றும் கூறினார் ஷங்கர்.

    இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்கும் முயற்சிகளில், ஒரு ரியல் எஸ்டேட் டெவலப்பருடன் மாட்டிக் கொள்கிறார். பின்னர் அதிலிருந்து வெளிவர அவர் சந்திக்கும் போராட்டங்களே படத்தின் கதைக்களமாக அமைந்தது.



    கவனம் பெறும் பொன்னியின் செல்வன் பட்டு புடவைகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்த, காயத்ரி கதாநாயகியாக நடித்திருந்தார். படத்திற்கு அப்பா-மகன் கூட்டணியான இளையராஜா மற்றும் யுவன் சங்கரராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி