Laabam: 'ரம்ஜானுக்கு லாபம் ரிலீஸாகும்’ விஜய் சேதுபதி அறிவிப்பு!

எஸ்.பி.ஜனநாதன் - விஜய் சேதுபதி

ரம்ஜானை முன்னிட்டு மே மாதம் லாபம் திரைப்படம், திரைக்கு வரும் என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

  • Share this:
    ரம்ஜானை முன்னிட்டு மே மாதம் லாபம் திரைப்படம், திரைக்கு வரும் என நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

    மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசிப்படம் லாபம். சிகப்பு சிந்தனையில் படங்களை இயக்கும் ஜனநாதன், லாபம் படத்தையும் அதே அடிப்படையில் இயக்கியுள்ளார். 100 ரூபாய் பொருளை 110 ரூபாய்க்கு விற்றால் அதனை ஊழல் என்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்ற அப்பொருளின் அடக்க விலைக்குள்ளேயே ஒரு ஊழல் இருக்கிறது. அது குறித்து லாபம் படத்தில் பேசியிருப்பதாக ஜனநாதன் படத்தை ஆரம்பிக்கையில் கூறியிருந்தார்.

    மார்ச் மாதம் வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதற்கு சிகிச்சை அளிக்கையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மார்ச் 13-ம் தேதி ஜனநாதன் காலமானார். தமிழ் திரையுலகுக்கு அது பேரிழப்பாக அமைந்தது.



    லாபம் படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 14-ம் தேதி படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். நேற்று இரண்டாவது பாடலை இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியிருந்தார்.
    லாபம் திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார். அவரது துக்ளக் தர்பார் ஓடிடி யில் வெளியாகும் நிலையில், லாபம் திரையரங்குகளில் வெளியாவது பெரும் ஆறுதல்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: