பிகில் உடன் மோதவில்லை... சங்கத் தமிழன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

news18
Updated: September 11, 2019, 12:10 PM IST
பிகில் உடன் மோதவில்லை... சங்கத் தமிழன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதி
news18
Updated: September 11, 2019, 12:10 PM IST
சங்கத் தமிழன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக படம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழனும், கார்த்தியின் கைதியும் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் தீபாவளிக்கு முன்னரே ரிலீசாகும் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சங்கத் தமிழன் திரைப்படம் அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வரும் என்று நடிகர் சூரி தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும், இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Loading...முன்னதாக தனுஷின் அசுரன் திரைப்படமும் அக்டோபர் 4-ம் தேது ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அசுரன், சங்கத் தமிழன் இடையே வசூலில் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பே சங்கத் தமிழன் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: மூன்றாவது திருமணம் செய்ய முயற்சித்த கணவனுக்கு தர்ம அடி!

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...