Home /News /entertainment /

விஜய் சேதுபதிக்கும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திற்கும் உள்ள ராசி!

விஜய் சேதுபதிக்கும் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்திற்கும் உள்ள ராசி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த சூதுகவ்வும், விக்ரம் வேதா இரண்டுமே பம்பர்ஹிட் திரைப்படங்கள்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் மைக்கேல் திரைப்படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்துக்கு மாறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்த சில வருடங்களாக அதிக திரைப்படங்களில் நாயகனாக நடிக்கும் பெருமையை பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தெலுங்கின் இளம் ஹீரோ சந்தீப் கிஷன் நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்திற்காக சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் புதிய கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் விஜய் சேதுபதி.

இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு நடந்த நல்ல விஷயம்.. ரசிகர்கள் செம்ம ஹாப்பி!

அடர்ந்த மீசையும் உண்டு.  மைக்கேல் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, ஆக்ஷன் வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி வருகிறார். இதனை படத்தின் டைட்டில் லுக் வெளியிட்ட போதே தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியுடன் படப்பிடிப்புதளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் கறுப்பு குளிர் கண்ணாடி அணிந்து ,கறுப்பு நிற வேட்டியில் விஜய் சேதுபதி உள்ளார். இந்தத் தோற்றத்தில் அவர் நடித்த சூதுகவ்வும், விக்ரம் வேதா இரண்டுமே பம்பர்ஹிட் திரைப்படங்கள். விரைவில் மைக்கேலின் வெளியீட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.விஜய் சேதுபதி கமல், பகத் பாசிலுடன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஜுன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

-

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor Vijay Sethupathi, Tamil Cinema, Tollywood, Vijay sethupathi

அடுத்த செய்தி