‘மொழி தெரிஞ்சா மட்டும் பத்தாது’ விஜய் சேதுபதியின் ‘லாபம்’ பட ட்ரெய்லர் ரிலீஸ்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘லாபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை செய்து முடித்தனர். இந்நிலையில் தற்போது ‘லாபம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.


அதில், தொழிற்சாலை இயங்கினால் தான் விவசாயம் செய்ய முடியும் என்று இங்கே நம்ப வைக்கப்படுவதாகவும், ஆனால் உண்மையில் விவசாயம் செய்தால் மட்டும் தான் இங்கே தொழிற்சாலை இயங்க முடியும் என்றும் விஜய் சேதுபதி ஆழமான வசனத்தை விஜய் சேதுபதி பேசியுள்ளார்.கார்ப்பரேட் அரசியல், பொருளாதார சுரண்டல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருப்பதை ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் உணர்த்துகின்றன. மேலும் ட்ரெய்லரின் இறுதியில் கொரோனா லாக்டவுன் முடிந்த பின்னர் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading