முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / டயட்டில் இருப்பது எனக்குப் பிடிக்காது... விஜய் சேதுபதி கருத்துக்கு உணவுப் பிரியர்கள் ஆதரவு!

டயட்டில் இருப்பது எனக்குப் பிடிக்காது... விஜய் சேதுபதி கருத்துக்கு உணவுப் பிரியர்கள் ஆதரவு!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றில்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும், விரும்பியதை சாப்பிட வேண்டும் என்று கூறிய விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ‘பார்ஸி’ என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இது விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. ராஜ் மற்றும் டிகே இயக்கிய இந்தத் தொடரில் விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர், கே.கே மேனன், ராஷி கண்ணா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘பார்ஸி’ சீரிஸின் வெற்றிக்குப் பிறகு சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, டயட்டில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். சுவையான உணவை சாப்பிட அவர் எப்போதும் விரும்புவதாகவும் குறிப்பிட்டார். மேலும் சுவையான உணவை உண்ணாவிட்டால், அவரது வாழ்க்கை சுவையாக இருக்காது என்றும் கூறினார் விஜய் சேதுபதி.

நடிகரின் இந்த பதில் அவரது ரசிகர்களை குறிப்பாக உணவு காதலர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. குறைந்த கலோரி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றில்லாமல் நல்ல உணவை சாப்பிட வேண்டும். விரும்பியதை சாப்பிட வேண்டும் என்று கூறிய விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது விஜய் சேதுபதி ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். அதோடு 'மெர்ரி கிறிஸ்துமஸ்', 'மும்பைகார்' மற்றும் 'காந்தி டாக்ஸ்' உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv