• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 96 பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

96 பட இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - பிரேம் குமார்

விஜய் சேதுபதி - பிரேம் குமார்

96 படத்தை இயக்கிய பிரேம் குமார் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்குகிறார்.

  • Share this:
    2018-ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தை பிரேம் குமார் இயக்கியிருந்தார். அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

    சீரியஸான காதல் கதைகள் தமிழ் சினிமாவில் காலாவதியாகி, ரொமான்டிக் காமெடி என்ற ஜானர் முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்த நேரத்தில் 96 வெளியானது. பள்ளிப்பருவ காதலை வளர்ந்த பின் திரும்பிப் பார்க்கும் நாஸ்டாலஜியை தூண்டும் கதை 96. படிக்கிற காலத்தில் யாருக்குதான் காதல் மலர்ந்திருக்காது? படம் பார்த்த அனைவரும் அதனை சொந்தக் கதைபோல் கொண்டாடியதில் படம் ஹிட்டானது. கேரளாவில் விஜய் சேதுபதி படங்களில் அதிகம் வசூலித்தது இந்தப் படம்தான்.

    இந்நிலையில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்குகிறார். இவர் அடிப்படையில் ஒளிப்பதிவாளர். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். இன்னொரு முக்கியமான விஷயம், அந்தப் படத்தின் கதையே இவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவம்தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    96 மிகப்பெரிய வெற்றிப் படம் என்பதால் விஜய் சேதுபதியுடன் பிரேம்குமார் இணையும் புதிய படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: