அடுத்தடுத்து 4 படங்கள் ரிலீஸ் - வியக்க வைக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தனது நான்கு திரைப்படங்களை வெளியிட தயாராகி வருகிறார்.

  • Share this:
ஒரு வார இடைவெளியில் விஜய் சேதுபதியின் நான்கு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் சூழல் தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ளது.

ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வருவதே தமிழ் சினிமாவில் பெரும்பாடாக இருந்து வருகிறது. ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவில் வாடிக்கையாக மாறி வருகிறது. பிற நடிகர்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிக்கவே தடுமாறிக் கொண்டிருக்க வருடத்திற்கு 6 படங்களுக்கு மேல் நடித்து தனது அபாரமான உழைப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை நடிகர் என விஜய் சேதுபதியை ஒரு தரப்பினர் அடையாளப்படுத்துகின்றனர்.

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தனது நான்கு திரைப்படங்களை வெளியிட தயாராகி வருகிறார். அதிலும் ஒரே நாளில் அவரது இரண்டு திரைப்படங்கள் வெளிவர தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திரையரங்குகள் திறந்த பின்னர் திரைக்கு வரும் முதல் பெரிய திரைப்படம் இது என்பதால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எவ்வாறு உள்ளது என்பதை காண ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதையடுத்து அடுத்த நாளான செப்டம்பர் 10-ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துக்ளக் தர்பார் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக தொலைக்காட்சியில் முதல்முறை ஒளிபரப்பாகவிருக்கிறது. இதேநாளில் நெட்பிளிக்ஸ் வலைதளத்திலும் இந்த திரைப்படம் வெளியாகிறது.

துக்ளக் தர்பார் திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 10-ஆம் தேதி, மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படமும் சோனி லிவ் வலைதளத்தில் வெளியாக உள்ளது. இந்த மூன்று திரைப்படங்கள் வெளியான ஒரு வார இடைவெளியில் செப்டம்பர் 17-ஆம் தேதி தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: