ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'பைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி

'பைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி

பைரி

பைரி

Byri First Look | புறா பந்தயத்தை மையமாக வைத்து ஜான் கிளாடி இயக்கியுள்ள 'பைரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி.கே புரொடக்‌ஷன் சார்பாக வி.துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ் திரை உலகில் இதுவரை இல்லாத முயற்சியாக முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பைரி'.

  இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் புறா பந்தயத்தில் நிஜமாக ஈடுபடுபவர்கள் நடித்திருக்கின்றனர்.

  இவர்களை தவிர, முக்கிய கதாபாத்திரங்களில் விஜி, ஆனந்த குமார், கவிஞர் பிரான்சிஸ் கிருபா, ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், கார்த்திக் பிரசன்னா, தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

  ஏ வி வசந்த குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார், படத்தொகுப்பை ஆர் எஸ் சதீஸ் குமார் செய்கிறார், அருண் ராஜ் இசையமைக்க, பாடல்களை கார்த்திக் நேத்தா, மோகன் ராஜன், பொன் மனோபன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

  புறா என்றால் சராசரியான மனிதர்கள் அனைவருக்கும் வெறும் புறாதான். ஆனால் புறா வளர்ப்பவர்களிடையே சப்ஜா, சுருமா, சாம்ப, கீரி, கிளாவர், தாரா என்று குறைந்தபட்சம் 100 பேர்கள் புழங்கும்… புறா பந்தயம் என்பது வெளியிலிருந்து பார்க்கும் போது சாதாரணமாகவே தோன்றும்…ஆனால் அதில் ஈடுபட ஆரம்பிப்பவர்கள் தங்களை மறந்து, தங்கள் தனிப்பட்ட வாழ்வை துறந்த மனநிலையிலேயே இருப்பார்கள். பந்தயத்தில் தங்கள் புறாவை அதிக நேரம் பறக்க வைப்பதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள். இவர்களின் வாழ்வே தனித்துவமானது. இதுவரை சினிமா அறிந்திராதது. ’’பைரி’’, திரைப்படம் அறியப்படாத, இந்த உலகையே முக்கிய களமாக கொண்டுள்ளது என்றுள்ளார் படத்தின் இயக்குனர் ஜான் கிளாடி.

  Published by:Vijay R
  First published: