Vijay Sethupathi: சம வயது நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi: சம வயது நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி

ஹீரோ, வில்லன், முதியவர் என எந்த கதாபாத்திரம் என்றாலும் எளிதாக கையாள்கிறார்.

  • Share this:
    தமிழில் ‘மாஸ்டர்’, தெலுங்கில் ‘உப்பென்னா’ ஆகியப் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது பாலிவுட் உட்பட மற்ற திரையுலகிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

    தோற்றம், கதாபாத்திரத்தின் தன்மை என சவாலான விஷயங்களை கூலாக ஹேண்டில் செய்து வருகிறார். சூப்பர் டீலக்ஸில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்தார். சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற திரைப்படங்களில் வயதான கதாபாத்திரங்களில் நடித்தார். ஹீரோ, வில்லன், முதியவர் என எந்த கதாபாத்திரம் என்றாலும் எளிதாக கையாள்கிறார்.

    Raiza Wilson: பிக் பாஸ் ரைசா வெளியிட்ட குளியல் வீடியோ

    தற்போது வெற்றிமாறனின் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சூரி கதாநாயகனாக நடிக்கும் அந்தப் படம் ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் வயதான தோற்றத்தில் நடிக்கவிருந்த மூத்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சூரியின் தந்தையாக விஜய் சேதுபதி நடிப்பார் எனக் கூறப்படுகிறது. சுவாரஸ்யமாக, படத்தின் ஹீரோ சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமே சம வயது தான். இதில் சூரியின் அப்பாவாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டது ஆச்சர்யமளிக்கிறது.

    இருப்பினும், நாவலில், வயதானவர் ஹீரோவுக்கு அப்பா இல்லை. ஒரு கொலைகாரனாக இருந்து பின்னர், கதாநாயகனுக்கு தந்தையாக மாறுவார். படத்தில் எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: