Home /News /entertainment /

ஷாருக்கானுடன் நடிக்கிறீர்களா..? வைரலாகும் விஜய் சேதுபதி பதில்!

ஷாருக்கானுடன் நடிக்கிறீர்களா..? வைரலாகும் விஜய் சேதுபதி பதில்!

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உடன் விஜய் சேதுபதி சமீபத்தில் கலந்துக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடிப்பது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

    பிஸியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, வில்லன் வேடங்களிலும், துணை வேடங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் தடம் பதித்த இவர், விரைவில் பாலிவுட் திரையுலகிலும் களமிறங்கவுள்ளார்.

    இதற்கிடையில், ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடிப்பார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இப்போது, அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் திரையைப் பகிர்வதை விஜய் சேதுபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    லைக்ஸை குவிக்கும் காஜல் அகர்வாலின் குடும்பப் படம்!

    இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உடன் விஜய் சேதுபதி சமீபத்தில் கலந்துக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. வீடியோவில் அனிருத், விஜய் சேதுபதியிடம் பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளைப் படிக்கிறார். அப்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நடிப்பது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “நிச்சயமாக” என்று பதிலளித்தார் விஜய் சேதுபதி. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay Sethupathi, Shah rukh khan

    அடுத்த செய்தி