Home /News /entertainment /

ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்… விரைவில் வெளியீடு தேதி அறிவிப்பு

ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் விஜய் சேதுபதி படம்… விரைவில் வெளியீடு தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி - நித்யா மேனன்

விஜய் சேதுபதி - நித்யா மேனன்

மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளர்.

    விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக விஜய் சேதுபதி மாறிப் போயுள்ளார். பாலிவுட்டிலும் அவருக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கால்ஷீட் இல்லாத காரணத்தால் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது... கண் கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா 

    ஹீரோவை விட வில்லன் கேரக்டரில்தான் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. மாஸ்டர், விக்ரம், தெலுங்கில் உப்பென்னா படங்களில் விஜய் சேதுபதி கேரக்டர் அதிகம் பேசப்பட்டது.

    இதற்கிடையே விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் இந்து இயக்கத்தில் ஒரு படம் உருவாக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் குறித்து பேசும் இந்த படத்திற்கு 19 (1) (a) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.



    மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளர்.

    இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம் 

    இதற்கான அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் ஆவலை தூண்டுவதாக உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay Sethupathi

    அடுத்த செய்தி