ரைட்டர் படத்தை இயக்கிய பிராங்க்ளின் ஜேக்கப்பின் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
சென்ற வருட இறுதியில் (டிச.24) வெளியான ரைட்டர் திரைப்படம் தமிழின் முக்கிய திரைப்படங்களுள் ஒன்றாக அமைந்தது. காவல்துறை என்ற அதிகார அமைப்பை அணுகி ஆராய்ந்து ரைட்டர் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் நிலவும் அதிகார படிநிலைகளில் காணப்படும் சாதிய பாகுபாடுகள், வன்முறை என பலவும் படத்தில்
அழுத்தமாக பதிவாகியிருந்தன.
இதையும் படிங்க.. விவாகரத்து அறிவிப்பை திடீரென நீக்கிய சமந்தா – குழப்பத்தில் ரசிகர்கள்!
பிராங்க்ளின் ஜேக்கப்பின் அடுத்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கயிருக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். இவர்தான் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தை வாங்கி விநியோகித்தவர். விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பும் இவரே.
விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற வருடம் நேரடியாக ஓடிடியில் வெளியான துக்ளக் தர்பார் படத்தையும் லலித்குமார் தயாரித்திருந்தார். விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இவருடன் இணைந்துதான் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க.. சிக்கியது ஆதாரம்.. தமிழ் – சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
இப்படி விஜய் சேதுபதி படங்களுடன் நேரடி தொடர்புடைய இவர்தான் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்
கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.