ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மம்மூட்டியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி? இயக்குநர் யார் தெரியுமா?

மம்மூட்டியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி? இயக்குநர் யார் தெரியுமா?

மம்மூட்டி - விஜய் சேதுபதி

மம்மூட்டி - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் இந்தப் படத்திற்கான தேதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடிகர் விஜய் சேதுபதி, புதிய படமொன்றில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    நடிகர் விஜய் சேதுபதி, தனது திறமையை நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல், திரைத்துறையில் உள்ள பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் நடிகர்களில் ஒருவர். இதுவரை அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

    அடுத்ததாக மற்றொரு ஜாம்பவானுடன் விஜய் சேதுபதி இணையவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் வேறு யாருமல்ல, பல தேசிய விருதுகளை வென்ற நடிகர் மம்முட்டி தான். இந்தப் படத்தை ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ ஆகியப் படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

    பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2 ட்ரைலர்!

    இதையடுத்து விஜய் சேதுபதி தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் இந்தப் படத்திற்கான தேதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் இதன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay sethupathi