தமிழைப் போற்றும் தலைப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தமிழைப் போற்றும் தலைப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி!
நடிகர் விஜய்சேதுபதி
  • News18
  • Last Updated: October 31, 2019, 6:55 PM IST
  • Share this:
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, ஆண்டுக்கு 8 முதல் 10 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள சங்கத் தமிழன் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. சங்கத் தமிழன் படத்தைத் தொடர்ந்து மாமனிதன் உள்ளிட்ட ஒரு சில படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 64, கடைசி விவசாயி, லாபம், க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகவும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகும் 33-வது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.




இந்தப் படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹாந்த் இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

வீடியோ பார்க்க: கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகைக்கு தாக்குதல்...!

First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading