ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

தனது ரசிகரின் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டினார் விஜய் சேதுபதி.

 • Share this:
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது நடிப்புமட்டுமின்றி எதார்த்தமான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தனது ரசிகர்களை சந்திக்கும் போது விஜய் சேதுபதியிடம் முத்தம் பெற வேண்டும் என்றே பலர் காத்திருப்பார்கள். உச்ச நட்சத்திரமான விஜய் கூட மாஸ்டர் படப்பிடிப்பின் போது விரும்பி விஜய் சேதுபதியிடம் முத்தம் பெற்றுக் கொண்டார்.

  இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின் ஆண் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி தலையில் முத்தமிடும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.  மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜியும் பெரும் வரவேற்பைப் பெற்றது. துக்ளக் தர்பார், மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட விஜய் சேதுபதியின் படங்கள் இந்த வருடம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மும்பைகர் என்ற பெயரில் உருவாகி வரும் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
  Published by:Sheik Hanifah
  First published: